.htaccess , .htpasswd போன்ற கோப்புகள் சில முக்கியமான பண்புகளை Apache இணைய வழங்கிக்கு (Web Server) தெரிவிக்கப் பயன்படுகின்றன.
இந்தக் கோப்புகளை உங்களால் உலவி வழியாகத் திறக்க இயலாது.
http://techtamil.com/.htaccess
1. HTML இறுதிப் பெயர் கொண்ட கோப்புகளை PHP போல பாவிக்க
அல்லது
இப்போது நீங்கள் உங்களின் கோப்புகளை
http://mywebsite.com/list.html
எனும் பெயரிலேய வைக்கலாம் ஆனால் அதனுள் PHP நிரல்களையும் எழுதிக் கொள்ளலாம். ஏன் இறுதிப் பெயர்களை http://techtamil.com/about.karthi , company.karthi என்று கூட நீங்கள் வைக்கலாம்.
2. 404 Not Found பக்கங்களை பயனுள்ள வகையில் மாற்ற.
உங்களின் தளத்தில் இல்லாத ஒரு பக்கத்தை ஒருவர் பார்க்க முயற்சித்தால் 404 Not Found என மூன்று வரிகளில் வரும் பிழைச் செய்தியை உங்களின் தளத்தின் தோற்றம் போன்றே வடிவாமைத்து காட்டினால் அது சிறப்பாக இருக்கும்.
உதாரணம் : http://www.techtamil.com/karthikeyan-is-a-lazy-guy.html
http://hyperbig.com/thisisnothere.html
# என ஒரு கொப்பில் நீங்கள் ஆரம்பித்தால் அந்த வரி ஒரு நிரல் வரி அல்ல (Comment line)
நீங்கள் error எனும் directory இல் 401.php எனும் கோப்பை வடிவாமைத்து வையுங்கள்.
3. முக்கியமான கோப்புகளை உலவி வழியாக எவரும் பார்க்காமல் தடுக்க.
சில நேரங்களில் நமது கோப்புகள் பிறருக்கு தெரியக்க் கூடாது. *.LOG கோப்புகள் மற்றும் *.SQL கோப்புகள். அதற்கு .htaccess இல் பின் வரும் வரிகளைப் பயன்படுத்த வேண்டும். இது Log, LOG, log என எப்படி இருந்தாலும் (Any Case) தடுக்கப் படும்.
4. 301 திருப்பி அனுப்பும் முறை
SEO செய்பவர்களுக்கு மிகவும் முக்கியமாக தெரிந்து இருக்க வேண்டிய விசயங்களில் ஒன்று 301 திருப்பி அனுப்புதல்.
உபயோகிக்கும் காரணம் 1:
உங்களின் தளத்தில் உள்ள பக்கங்கள் அனைத்தையும் புதிய மென்பொருள் (Joomla, WordPress, PHPBB) மூலமாக புதிபிக்க விரும்புகிறீர்கள் எனக் கொள்வோம்.
http://mywebsite.com/computertricks.html
இப்போது இது.,
http://mywebsite.com/category/computer-tricks
அதாவது நீங்கள் உங்களின் பக்கங்களை wordpress மென்பொருளில் சேமித்து வைத்துள்ளீர்கள். ஆனால் Google/Bing போன்ற தேடு பொறிகள் இன்னமும் உங்களின் computertricks.html எனும் பக்கத்தை தான் மக்களுக்கு காட்டி வருகிறது எனில் உங்களின் புதிய வாசகர் அனைவரும் ஒரு 404 பக்கம் அல்லது பழய பக்கத்தைத்தான் பார்ப்பார்கள்.
மற்றும்.. ஒருவேளை அந்தப் பக்கத்திற்கு Google Page rank இருந்திருந்தால் அதை நீங்கள் கண்டிப்பாக உங்களின் புதிய பக்கத்திற்கு மாற்ற வேண்டும்.
உங்களின் பழைய பக்கத்திற்கு பல தளங்களில் தொடுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கலாம் அவைகளும் வீணாகப் போய்விடும்.
ஆதலால் நீங்கள் கண்டிப்பாக 301 நிரந்தர திருப்பி அனுப்பும் நிரல் பயன்படுத்த வேண்டும்.
உபயோகிக்கும் காரணம் 2
பயனாளர்க்கு எளிதில் புரியும் படியும், தேடு பொறிகளுக்கு புரியும் வகையிலும் நமது தள முகவரிகள் இருப்பது மிகவும் அவசியம்.
http://techtamil.com/category.php?catid=10
என இருப்பதற்கும்
http://techtamil.com/category/php-tutorials என இருப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது அல்லவா?
எனக் கொடுக்கும் போது… எப்போதெல்லாம் உலவியில் தள முகவரி http://techtamil.com/category/something என வருகிறதோ அப்போதெல்லாம் Apache web server இந்த நிரலை இயக்க வேண்டும் எனத் தெரிந்து கொள்ளும்.
http://techtamil.com/category.php?catname=something
நீங்கள் உங்களின் category.php நீரலில் $_GET முறையில் catname எனும் பெயரில் எந்த மதிப்பு வந்தாலும் அதை உங்களின் mysql table இல் இருக்கிறதா என தேடி அது சம்பந்தமான விசயங்களை பிரிண்ட் செய்யுங்கள்.
Your Table columns: categories {id, name, slug, description, image}
Code in category.php
உங்களுக்கு இப்போது .htaccess பற்றிய சில பயன்பாடுகள் தெரிந்திருக்கும் என நம்புகிறேன். உங்களுக்கு எது கேள்விகள் இருந்தால்.. இங்கே அல்லது நமது கேள்வி பதில்பகுதியில் கேட்கவும்.
0 comments:
Post a Comment