COOL TAMIL BOYS LIVE CRICKET

HINDU

Thursday, 24 October 2013

வாராஹி மந்திர புஸ்தகம்.Cool_Tamil_Boys

வல்லமை என்ற சொல்லின் வடிவம்தான் வாராஹி! சொல்வல்லமை; செயல் வல்லமை இரண்டுக்குமே அதிகாரி இவள்.

வாராஹி பக்தர்களுக்கு பக்கத்துணை. பகைவருக்கோ பெருநெருப்பு!

பயம், கவலை, நடுக்கம், எதிர்ப்பு, பகை என்று நினைத்து நினைத்துக் கலங்குபவர்களுக்கு அபயம் கொடுக்கும் அற்புதம் வாராஹி!

அஸ்வாரூபா, மஹாவராஹி, லகு வாராஹி, மந்திர வாராஹி, வார்த்தூளி என்று எத்தனை வடிவங்கள். நான்கு கரம், எட்டு கரம், பதினாறு கரம் என்று பலப்பல கோலங்கள். 

வெள்ளிக்கிழமைகளில் இந்த தேவியை வழிபடுவதால் மாங்கல்ய பலமும் வியாபார விருத்தியும் கிடைக்கும். 

நோயுற்றவர்கள் தங்களின் நோய் நீங்கி நலம் பெற ஞாயிற்றுக்கிழமைகளில் வாராஹியை வழிபடுவது சிறப்பு. மனநலம் குன்றியவர்கள், வீண் கவலைகளுக்கு ஆளானவர்கள் திங்கட்கிழமைகளில் வழிபட வேண்டும். நிலம், வீடு, வழக்கு தொடர்பான பிரச்சனைகளில் இருந்து வழிபட செவ்வாய்க்கிழமையிலும், கடன் தொல்லை அகல புதன் கிழமைகளிலும், குழந்தைப்பேறு மற்றும் கல்வியில் தேர்ச்சி பெற வியாழக்கிழமைகளிலும் ஸ்ரீ வாராஹியை வழிபட வேண்டும். 

சப்த மாதர்களில் ஒருத்தியான ஸ்ரீ வாராஹி, பராசக்தியின் படைத் தளபதியாகி பண்டாசுரனை அழித்தவள். இந்த தேவிக்கு பஞ்சமீ, தண்டநாதா, சங்கேதா, சமயேஸ்வரி, சமய சங்கேதா, வாராஹி, சிவா, போத்ரிணி, வார்த்தாளி, மகாசேனா, அரிக்னி, ஆக்ஞா சக்ரேஸ்வரி ஆகிய பெயர்களும் உண்டு. இவளது திருநாமம் ஜபித்து வழிபட்டால் எந்தக் காரியத்திலும் வெற்றி கிட்டும் என்று ஞான நூல்கள் போதிக்கின்றன.


ஸ்ரீ வாராஹி தேவி, ஸ்ரீ நகரம் எனும் ஸ்ரீ சக்ர தேவதைகளுள் மிகவும் மேன்மையானவர். அம்பிகையின் மந்திரிகளுள் ஒருவர். வேண்டுவோருக்கு வேண்டுவனவற்றை விரைவில் அருளுபவள். தமது கரங்களில் விவசாயம் சம்பந்தமான தொழில்கள் மேம்பாடு அடைய ஏர்கலப்பையும், உலக்கையையும் ஏந்தியவள். 

நம் உடலில் இருக்கும் ஆறு ஆதார சக்கரத்தில் நெற்றியில் விளங்கும் ஆக்ஞா சக்கரத்திற்கு உரிய தேவி ஸ்ரீ வாராஹி தேவி.

வாராஹி உபாசனை
மிக எளிய முறையில் வழிபாடு செய்தாலே மனமிரங்கி வரங்கள் அளித்திடும் தன்மை கொண்டவள் ஸ்ரீ வாராஹி தேவி. 
ஸ்ரீ வாராஹியின் பனிரண்டு பெயர்களைச் சொன்னாலே அம்பிகை ஸகல கார்ய சித்தியும், அளவற்ற அருளையும் அருளுவாள். 
1. பஞ்சமீ 2. தண்டநாதா 3. ஸங்கேதா 4. ஸமயேஸ்வரி 5. ஸமயஸங்கேதா 6. வாராஹி 7. போத்ரிணி 8. சிவா 9.வார்த்தாளி 10. மஹாசேனா 11. ஆக்ஞா சக்ரேஸ்வரி 12. அரிக்னி 
ஸ்ரீ நவாவரண பூஜையில் வராஹி தேவியின் மேற்கண்ட பனிரண்டு நாமாவளிகள் கொண்ட அர்ச்சனையை செய்து முடித்தபின் தான் ஆவரண பூஜை பூர்த்தியாகும். 
பில்லி, சூனியம், கண் திருஷ்டி போன்ற தீவினைகளை வேரோடு களைபவள் என்று ஸ்ரீ வாராஹி மாலா போற்றுகின்றது. 

அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகியாம் ஆதிபராசக்தியின் தலைமை அதிகாரியாக அருள்பவளே வாராஹி. 

 அம்பாள் மகிஷாசுரனை வதம் செய்து மனிதகுலத்தைக் காக்க வராகி வடிவம் கொண்டாள்   வராக முகத்தை உடை யவள்; இழிகுணம் படைத்த தீயோரது உடலங்கங்களைக் காலத்தில் அழிப்பாள்; உலக்கையோடு மற்றும் ஏழு ஆயுதங்களை ஏந்தி இருப்பாள்; சிரித்த முகத்தையுடையவள். தங்கள் துன்பங்களை நீக்க வேண்டித் தியானிப்பவர்களது உள்ளத்தில் என்றும் நீங்காது இருப்பாள்.   மனதின் சுய நிலையான சுத்த நிலையே  மூலமான வஜ்ர வராகி .  அவள் எம்முள்ளே உறைகிறாள்,  எங்கும் தேடவேண்டாம்,  வெளியே தேடுதல் சிறுபிள்ளைத்தனமானது, மூடத்தனமானது.  மனதின் உண்மை நிலையானது

வராகியில் பல வடிவங்கள் உண்டு. இரண்டு கைகள், நான்கு கைகள், எட்டுக்கை, பதினாறு கை என்று விளங்கும். எத்தனை கைகளில் எத்தனை ஆயுதம் ஏந்தியிருந்தாலும்  அவளுடைய மூலமான முக்கிய கருவிகள் உலக்கையும் கலப்பையும்தான்.  வராகியில் பலவகைகள் உண்டு. ஸ்வப்ன வராகி போன்றவர்கள்  பரிவார தேவதைகளும் உண்டு. அந்தினீ, ருந்தினீ,ஜம்பினீ,ஜ்ரும்பினினீ, மோஹினி என்று பலர் இருக்கிறார்கள்.  பகளாமுகி போன்ற தெய்வங்களும் வராகி சம்பந்தப்பட்டவர்கள்தாம்.    

உலகாளும் ஆதிபராசக்தியின் மறுபெயரே வராகி ,  வராகியை வராகிலக்ஷ்மி என்றும் அழைக்கலாம்  

வராஹி மூல மந்திரம் எண்ணியவை நிறைவேறும் :

ஒம் க்லீம் உன் மத்தபைரவி வாராஹி 

ஸ்வ்ப்பண்ம் டட: ஹும்பட் ஸ்வாஹா !!

ஸ்ரீ மஹா வாராஹியின் அபூர்வமான மூல மந்திரம்


ஒம் ஐம்க்லெளம் ஐம்நமோ பகவதீ

வார்த் தாளி , வார்த்தளி

வாராஹி வராஹமுகி வராஹமுகி

அந்தே அந்தினி நம :

ருத்தே ருந்தினி நம :

ஜம்பே ஜம்பினி நம :

மோஹே மோஹினி நம :

ஸதம்பே ஸ்தம்பினி நம:

ஸர்வ துஷ்ட ப்ரதுஷ்டானாம் ஸ்ர்வே ஷாம்

ஸர்வ வாக் சித்த சதுர்முக கதி

ஜிஹ்வாஸ்தம் பனம், குரு குரு 

சீக்ரம் வச்யம் ஐம்க்லெளம்

ஐம் ட:ட:ட:ட:ஹும் அஸ்த்ராயபட்

நாயகி, நான்முகி நாராயணி கை நளின பஞ்ச
சாயகி சாம்பவி சங்கரி, சாமளை சாதி நச்சு
வாய் அகி மாலினி வாராஹி, சூலினி மாதங்கி என்
றாயகி யாதி உடையாள் சரணம் அரண் நமக்கே!”


என அபிராமிபட்டர் துணையாகக் கொண்டாடிய அம்பிகையின் வடிவம் வாராஹி.


“பயிரவி பஞ்சமி, பாசாங்குசை பஞ்சபாணி வஞ்சர்
உயிர் ஆவி உண்ணும் உயர் சண்டி காளி ஒளிரும் கலா
வயிரவி மண்டலி மாலினி சூலி, வாராஹி என்றே
செயிர் அவி நான்மறை சேர் திரு நாமங்கள் செப்புவரே!’

திருமணத்தடை உள்ளவர்கள், குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள், எதிரிகளால் பாதிப்படைந்தவர்கள், வழக்குகளில் சிக்கியவர்கள் வாராஹி அம்மனை வழிபட்டு பலனடையலாம்
வராக (பன்றி) முகம், மூன்று கண்கள் மற்றும் எட்டு திருக்கரங்களுடன் திகழ்பவள் ஸ்ரீ வாராஹி. தன் திருக்கரங்களில் சங்கு, சக்கரம், கட்கம் (கத்தி), உலக்கை, கலப்பை, உடுக்கை மற்றும் அபய - வரத முத்திரைகளுடன் காட்சி தருபவள். நீல நிற மேனியளான இந்த தேவி சிவப்பு நிற ஆடை உடுத்தி, சந்திர கலை தரித்த நவரத்தினக் கிரீடம் அணிந்தவளாக சிம்ம வாகனத்தில் வீற்றிருப்பாள் என்கின்றன புராணங்கள்

உபாஸனை என்றால் ஒரே தெய்வத்தை மனதில் மேன்மையானதாக இருத்திக்கொண்டு அந்த தெய்வத்தையே சதா சர்வ காலமும் நினைந்து போற்றி வழிபாடு செய்வதாகும்.


பூஜை செய்யும் போது பூஜகன் மந்திரங்களால் சூழப்பட்டு, அஹமேத்வம் எனும் சொல்லுக்கிணங்க பூஜகனே அம்பிகையாக மாறிச் செய்வது தான் இந்த பூஜையின் மிக முக்கியமான அம்சமாகும். பூஜகன் பூஜனை மந்திரத்தினால் மானஸீகமாக தன்னை பூஜையில் எரித்துக்கொள்வதே இந்த பூஜையின் யாகமாகக் கருதப்படுகிறது. ஆகையினாலேயே இந்த பூஜை "ஸ்ரீவித்யா மஹா யாக க்ரமம்" என்று போற்றி அழைக்கப்படுகிறது. 

ஸ்ரீ என்றால் செல்வங்களை வாரிவழங்கும் லக்ஷ்மிக்குரிய அக்ஷரம்



தசமஹா வித்யா
- சக்தியின் வடிவங்கள்.

பிரபஞ்ச ரகசியங்களில் பல விஷயங்கள் மனித நிலையில் உணர முடியாது. பிரபஞ்சமும் உயிர்களும் தோன்றுவதும், அழிவதும் ஏன் என்பதும் - அவை எவ்வாறு ஏற்படுகின்றது என்பதும் விடுவிக்க முடியாத முடிச்சாகவே இருக்கிறது. மனித அறிவால் உணரமுடியாத விஷயங்களை தெய்வீக நிலையால் உணரலாம்.

 மனித நிலையிலிருந்து தெய்வ நிலைக்கு மாற்றமடைவது எளிதான விஷயமா? பல பிறவிகளாகவும் பல யுகங்களாகவும் பலர் முயற்சி செய்து கிடைக்காத விஷயத்தை நம்மால் பெறமுடியுமா என உங்கள் கேள்விகள் விரிவடைந்து கொண்டே செல்வதை நான் அறிவேன். உலகின் மும்முதல் பணி என அழைக்கப்படும் படைத்தல் - காத்தல் - அழித்தல் இவற்றை தெரிந்துகொள்ள வேண்டுமானால் அந்த பணிகளை செய்பவராக மாறினால் மட்டுமே உணர்ந்துகொள்ள முடியும்.

தெய்வீகமான முப்பணிகளை செய்யும் ஆற்றல் பெற்றவுடன் உங்களின் நிலை முழுமையை பெறும். இந்த நிலையே முக்தி அல்லது பிரம்மஞானம் என கூறப்படுகிறது. மேற்சொன்ன வார்த்தைகளை கூர்ந்து கவனியுங்கள். முப்பணிகளை செய்ய "ஆற்றல்" அவசியம். இந்த ஆற்றலே "சக்தி" என அழைக்கப்படுகிறது. 

நடைமுறையில் ஆற்றல் என்ற சொல்லும், சக்தி என்ற சொல்லும் ஒரே அர்த்தத்தில் பயன்படுத்தப்படுகிறது. உண்மையில் இவை இரண்டும் வெவ்வேறானது. ஆற்றலுக்கு அழிவில்லை. ஒரு ஆற்றலை மற்றொரு ஆற்றலாக மாற்றலாம் என விஞ்ஞான ரீதியாக குறிப்பிடுபவை "ஆற்றல்" என கூறலாம். 

தோற்றமும், முடிவும் அற்ற எங்கும் எல்லா பொருட்களிலும் வியாபித்து இருக்கும் ஓர் வஸ்து "சக்தி" எனலாம். இதை எளிய உதாரணம் மூலம் தெரிந்துகொள்வோம். வயது முதிர்ந்த ஒருவர் இளைஞகளைப் போல ஓட்ட பந்தயத்தில் கலந்துகொண்டார் என்றால் அவருக்கு இளைஞர்களைப் போல ஆற்றல் உண்டு எனலாம். ஓர் இடத்தில் இல்லாதது மற்றொரு இடத்தில் இருப்பதால் ஆற்றல் அழிவதில்லை. இடமாற்றம் அடையும் எனும் கூற்று கூறப்படுகிறது.

தனது குழந்தையின் மேல் தாய் காட்டும் பாசம் அந்த குழந்தையின் வளர்ச்சிக்கு காரணமாகிறது. இந்த தாய்மை உணர்வு பெண்களுக்கு ஏற்பட எந்த தூண்டுதலும் கிடையாது. தாய்மை எனும் உணர்வு எல்லா தாய்மார்களுக்கும் பொதுவானது மற்றும் ஏற்றத்தாழ்வு இருக்காது. இதனால் தாயுணர்வு இங்கு சக்தியாக மாறுகிறது. வெவ்வேறு வயதில் தாய்மை அடைந்தாலும் தாய்மை எனும் சக்தி மாறாது. ஆற்றலுக்கு மாறும் தன்மை உண்டு. ஆனால் சக்தி மாற்றம் அடைந்தாலும் சக்திநிலை மாற்றம் அடையாது. ஆங்கிலத்தில் Energy, power என்று பொதுவாக கூறப்பட்டதால் ஆற்றல், சக்தி என்ற வார்த்தைகள் பொதுவாகவே அர்த்தம் கொள்ளப்படுகிறது. 

இவற்றை விளக்க காரணம் முப்பணிகளை செய்யும் தெய்வீக நிலைக்கு " சக்தி " அவசியம். சக்தி நிலை இல்லை என்றால் எதுவும் இயங்காது.

பிரபஞ்சத்தில் நடைபெறும் அனைத்து செயலுக்கும் ஒரே சக்தி காரணமாக இருக்கிறது. இந்த மாபெரும் சக்தியே மஹாசக்தி என கூறப்படுகிற

3 comments:

"எம்மதமும் சம்மதம்., எம்மதமும் என்மதம்"

ஜெய் விக்ணேஷ்...

மக்களின் அறியாமையைப் பயன்படுத்தி ஆன்மீகம் என்ற பெயரில் மக்களை முட்டாள்களாக்கும் செயலிலுருந்து அவர்களை விடுவித்து நல்வழிப்படுத்த ஒரு சிறு முயற்சி...

கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு யார் வேண்டுமானாலும் பதில் கூறலாம்.

குறிப்பாக மதத்தலைவர்களிடமிருந்தும்... மதகுருமார்களிடமிருந்தும் பதில்கள் வரவேற்கப்படுகின்றன...

தெரி[ளி]ந்தவர்கள் பதில் கூறலாம்...
தெரி[ளி]யாதவர்களுக்கு தெளி[ரி]வுபடுத்தப்படும்...

ஓம்கார்...
நல்லதே நடக்கட்டும்...
ஆனந்தமாய் இரு...

1] மதம் என்றால் என்ன?
அவை எத்தனை?
அவை யாவை?
அதன் பொருள் என்ன?

2] ஆன்மீகம் என்றால் என்ன?

3] தியானம் என்றால் என்ன?
அதற்கு விளக்கம் தேவை...!
4) தேவன்
ஆண்டவன்
இறைவன்
கடவுள்
நாசி

இவை யாவை? விளக்கவும்...


Contact: www.facebook.com/laalbabaji
laalbabaji@gmail.com

உங்கள் கேள்விகளுக்கு நன்றி...

நான் ஆன்மீகவாதியோ, மதபோதகர் அல்ல!!!

நான் காமன் மேன்...மாதம் சம்பளம் வாங்கி, அரசாங்கத்திற்கு வரி கட்டும் காமன் மேன்...

எனக்கு தெரிந்ததை சொல்கின்றேன்.

1. மதம் : மனிதனால் கடவுளை பிரித்து பார்ப்பது. பாதைகள் வேறுபட்டாலும் மார்க்கம் ஒன்றுதான். ஆனால், சிலர் புரியாமல் அவரவர் மதத்தினை உயர்வாக, மற்ற மதத்தினை தாழ்வாக க௫துகிறார்கள்.
அது, தவறு... எந்த ஒ௫ கடவுளும் எனக்கு இது வேண்டும், அது வேண்டும் என்னு கேட்கவில்லை... மனிதனே தனக்கு என்ன தோன்றியதோ அதை கடவுளுக்கு அர்ப்பணிக்கிறான். கடவுள்தான் உலகை படைத்தார் உண்மைதான். ஆகவே அவர் படைத்ததை அவ௫க்கே படைத்து தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்றால் எப்படி? அனைத்து மதத்தின் கடவுள் சொல்வது கடமையை செய் பிற௫க்கு அவர்கள் தேவை அறிந்து உதவி செய். பசித்தவர்களுக்கு உணவளி... இப்படி மனிதாபிமானத்தோட செய்தால் அனைவ௫ம் கடவுள் தான்...

மதத்தின் பெயரால் கடவுளை பிரிப்பதற்கு பதிலாக மனிதாபிமானத்தோட கடவுளின் சேவையாக வாழ்வோம்!!!

தியானம் என்பது மனிதனுக்கு எப்படி தேவை என்றால்... வேலைக்கு சென்று நன்றாக உழைத்து நன்றாக 6 முதல் 8 மணி நேரம் வரை தூங்கினாலே போதும். மனமும் கட்டுபடும் உறக்கத்தில்... உடலும் தெளிவடையும்...

ஆன்மீகம் என்பது கடவுளை தேடி, கடவுளை அடையும் பாதை என்பார்கள். தவறாக யா௫ம் பயன் படுத்த வேண்டாம். நம் அம்மா, அப்பா, மனைவி, பிள்ளைகள் அவர்கள் தான் நமக்கு கண் கண்ட தெய்வங்கள். உன்னை இந்த உலகிற்கு அறிமுக படுத்தி, படிக்க வைத்து, கல்யாணம் ஆகும் வரை பொறுப்பு அம்மா, அப்பாவிடம்... இது முற்பாதி வாழ்க்கையில்...பிற்பாதி நம்மை நம்பி வந்த ஆணோ பெண்ணோ... இன்பம், துன்பமும் சரிபாதியே... உன்னை நம்பி வந்தவர்களுக்கும், நம்பி இ௫ப்பவர்களுக்கும் காப்பாற்ற வேண்டிய கடமை நம்மிடமே...ஆன்மீகமும் அதுதான்... அம்மா, அப்பா, மனைவி, வாரிசு இவர்கள்தான் நம் கடவுள்...

தேவன், இறைவன், கடவுள் பெயர்கள்தான் வேறு... அனைத்தும் ஒன்றே... நாம் வாழும் பூமியில் வேவ்வே௫ நாடுகள், பகுதிகள் இ௫ந்தாலும்... சுவாசிக்கும் காற்று ஒன்றுதான்...

குறிப்பு : பதிவில் பதிவு செய்தது என்னுடைய க௫த்துகள் மட்டுமே. எழுத்து பிழை இறுப்பின் மன்னிக்கவும்.

பெயர் : சுபாஷ்
நம்பர் : +91(0)8072787504

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites