COOL TAMIL BOYS LIVE CRICKET

HINDU

Thursday, 24 October 2013

நீரெட்டி முத்து.Cool_Tamil_Boys

நீரெட்டி முத்து.



நீரெட்டி முத்து மரம்.


நீரெட்டி முத்து.

மூலிகையின் பெயர் :– நீரெட்டி முத்து.

தாவரப்பெயர் :– HYDNOCARPOS PEN TANDRA.

தாவரக் குடும்பம் :- ACHARIACCEAE.

வேறுபெயர்கள் :– மரவட்டை, வட்டை, மற்றும் ஆங்கிலத்தில் MOROTHI TREE & CHAULMUGRA. என்று சொல்வர்.

பயனுள்ள பாகங்கள் :– விதை, வேர், மற்றும் இலை ஆகியன.

வளரியல்பு :– நீரெட்டி முத்து என்ற மரம் நடுத்தர வர்கத்தைச் சேர்ந்தது. இதன் தாயகம் ஜப்பான் மற்றும் சீனா. இது 30 அடிமுதல்  75 அடிகள் உயரம் வரை வளரக்கூடியது. இது பசுமைக் காட்டில் வளரக்கூடியது. ஆற்றுப் படுகைகளில் அதிகம் காணப்படும். இதன் குடும்பத்தில் 40 வகை உண்டு. இது மலைப்பிரதேசங்களில் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் முதல் 1700 மீட்டர் வரை வளரக்கூடியது. இதற்கு மிதமா சீதோசனம் தேவை. இலைகள் கரும்பச்சை நிரத்தில் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இதன் நீளம் .7 செ.மீ. முதல் 2.2 செ.மீ. வரை இருக்கும். இதன் பூக்கள் ஆண்பூக்கள் என்றும் பெண் பூக்கள் என்றும் இருக்கும். ஆண் பூக்கள் ஒன்று திரண்டும், பெண் பூ தனியாகவும் இருக்கும். பூக்கள் வெண்மையாக இருக்கும். பூவின் இதழ்கள் 3 – 6 மற்றும் 2 – 3 என்று காணப்படும். பூக்கள் வாசனையாக இருக்கும். இந்த மரங்கள் இந்தியாவில் மகாராஸ்ட்ரா, கோவா, கர்நாடகா, தமிழ் நாடு, கேரளா, மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய இடங்களில் காணப்படும். இதன் காய் பிஞ்சாக இருக்கும் பொழுது கருப்பாகத் தென்படும். பின் முற்றும் போது மரக்கலராக மாரும். அதன் விட்டம் சுமார் 6 செ.மீட்டராக இருக்கும். இந்த மரம் ஏப்ரல் மாதத்தில் பூக்க ஆரம்பித்து அக்டோபர் மாதத்தில் காயுடன் இருக்கும். பழங்கள் முற்றிய பின் மரக்கலராக இருக்கும். ஒரு காயில் சுமார் 15 முதல் 20 வரை கொட்டைகள் இருக்கும். விதைகளை ஒரு ஆண்டு சேமித்து வைக்கலாம். ஆனால் ஒரு மாதத்தில் பாத்தியில் ஊன்றி விட வேண்டும். முழைப்புத் திரன் குறைவாகத்தான் இருக்கும். விதைகளிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். அந்த எண்ணெயில்‘SHAVLMOOGRA’ என்ற வேதியப் பொருள் உள்ளது. இது முக்கியமான மருத்துவ குணம் உடையது. கட்டிங் முறையிலும் இன விருத்தி செய்யப்படும்.

மருத்துவப் பயன்கள் :– நீரெட்டி முத்து மரம் வீடுகட்ட கட்டுமானப்பொருட்களாகவும், மரப்பெட்டிகள் செய்யவும். விரகு எரிபொருளாகவும் பயன் படுத்துப் படுகிறது. இந்த மரத்தின் கொட்டையிலிருந்து எண்ணெய் எடுப்பார்கள். அந்த எண்ணெய் மஞ்சள் நிறத்தில் இருக்கும். அந்த எண்ணெயை ஆரம்ப தோழு நோய் உள்ளவர்கள் இதை மேல் பூச்சாகப் பூசினால் நோய் குணமடைவதைக் காணலாம். இந்த எண்ணெய் தோல் சம்பந்தமான எல்லா நோய்களையும் குணமாக்க வல்லது.
‘லீகோடர்மா’ என்ற நோயைக் குணப்படுத்தும். இது மன அழுத்தத்தைக் குறைக்கும். உடலில் ஏற்படும் புடைத்த கட்டிகளை குணப்படுத்தும். ஆராத குடல் புண்களை குணப்படுத்த வல்லது. வயிற்றுப் புழுக்களை வெளியேற்றும். நாட்பட்ட புண்கள் குணமடையும். வாதம், சுழுக்கு, நெஞ்சுவலி, கண்நோய் ஆகியவற்றைக் குணப்படுத்தும் டானிக்காகப் பயன் படுத்தப் படுகிறது. இந்த மரத்தின் வேர் மற்றும் காய்ந்த இலைகளையும் சேர்த்து ஊரவைத்து கசாயமாக்கி உட்கொள்ளும் போது மலேரியா நோய் குணமாகும். சுண்ட வைத்து அடிச் சாற்றைத் தலைக்கு இட்டால் முடி உதிர்வதைத் தடுக்கும். இதன் பூவிலிருந்து நறுமணத்தைப் பிரித்தெடுத்து வாசனைப் பொருட்கள் தயார் செய்கிறார்கள். இதன் இலையை நன்கு ஊரவைத்து பதப்படுத்தி போதை உண்டாகும் ஒரு குடிபானத்தைத் தயாரிக்கிறார்கள். இதன் எண்ணையில் உள்ள பலவகை வேதியல் பொருட்களுடன் வேற்று மரங்களில் எடுக்கப்பட்ட நுண்நுயிர்களுடன் முறைப்படி கலந்து தாவரங்களுக்கு உபயோகமான பூச்சிக் கொல்லி மருந்தாகவும், ஊட்டச்சத்து மிகுந்த ஊக்கியாகவும்  மரப்பெருக்கு மைய (IFGTB) விஞ்ஞானிகள் தமது ஆராய்ச்சி மூலம் நிரூபித்து அறிமுகப்படுத்தியுள்ளனர். 

நீரெட்டி முத்து காய்.
நீரெட்டி முத்து விதை
               
-------------------

திங்கள், 5 நவம்பர், 2007

அம்மான்பச்சரிசி


அம்மான்பச்சரசி.


1) வேறுபெயர்கள் -: சித்திரப்பாலாடை.


2) தாவரப்பெயர் -: EUPHORBIA HIRTA.


3) தாவரக்குடும்பம் -: EUPHORBIACEAE.


4) வகைகள் -: பெரியமான் பச்சரிசி, சிற்றம்மன் பச்சரசி,சிவப்பம்மான் பச்சரிசி, வெள்ளையம்மான் பச்சரிசி,வயம்மாள் பச்சரிசி.


5) வளரும் தன்மை -: ஈரமுள்ள இடங்களில் தானே வளரும். சிறு செடி. எதிர் அடுக்கில் கூர்நுனிப்பற்களுடன் கூடியஈட்டி வடிவ இலைகளையுடையது. பால் உள்ளவை. தமிழகத்தில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது.விவசாய நிலங்களில் கழையாக வளரும். விதை மூலம் இனப்பெருக்கம் அடைகிறது.


6) பயன்தரும் பாகங்கள் -: இலை, தண்டு, பால், பூ, ஆக்கியவை.


7) பயன்கள் -: அம்மான் பச்சரிசிக்கு எரிபுண், மல பந்தம், பிரமேகக்கசிவு, சரீரத்துடிப்பு, நமச்சல் ஆகியவை போகும்.


இந்த மூலிகையை சுமார் நெல்லிக்காய் பிரமாணம் நன்றாய் அரைத்து பாலில் கலந்து தினம் ஒரு வேழை மூன்றுநாட்கள் கொடுக்க அரத்த பிர்ழியம், மலபந்தம், நீர்கடுப்பு,தேகநமச்சல், ஆகியவை நீங்கும். இதன் பாலை நக சுற்றிக்குஅடிக்க குணமாகும்.


சிவப்பு அம்மான் பச்சரிசி மூலிகைக்கு வாதம், பிரமேகம்,ஆகியவை போகும். சுக்கில தாது விர்த்தியாகும். இதைவெள்ளிபஸ்பம் என்றும் கூறுவர்.
இதை நிழலில் உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக்கொண்டு 5 - 7 குன்றி எடை வீதம் மோரில் கொடுக்க குழந்தைகளுக்கு மலத்தை போக்கும், வயிற்று உபத்திரவத்தையும், கிருமிக் கூட்டத்தையும் ஒழிக்கும். இந்த இலையை அரைத்து சுமார் 1- 1.5 கழற்சிக்காய்ப் பிரமாணம் பால் அல்லது மோரில் கலக்கிப் பெரியவர்களுக்குக் கொடுக்க வேட்டை, வெள்ளை, மருந்துகளின் உஷ்ணம் ஆகியவைபோகும். அரைத்து ஊறலுடன் பரவுகின்ற படைகளுக்குப்பூச குணமாகும்.


இது வயிற்றுப்பூச்சி அகற்றியாகவும், மலமிளக்கியாகவும்,வெப்புத் தணிப்பானாகவும், சதை நரம்புகளில் வீக்கம்குறைப்பானாகவும், செயற்படும்.
இலையை சமைத்து உண்ண வறட்சி அகலும், வாய், நாக்கு, உதடு, ஆகியவற்றில் வெடிப்பு ரணம் தீரும்.


தூதுவேளை இலையுடன் துவையல் செய்து சாப்பிடத்தாது உடல் பலப்படும்.
கீழாநெல்லியுடன் சமன் அளவு இலை சேர்த்து காலை, மதியம், இரு வேழையும் எருமைத் தயிரில் உண்ணஉடம்பு எரிச்சல், நமைச்சல், மேகரணம், தாது இழப்புதீரும்.


பூவுடன் 30 கிராம் அரைத்து கொட்டைப் பாக்களவு பாலில் கலந்து ஒரு வாரம் கொடுக்கத் தாய் பால்பெருகும்.


பாலைத் தடவி வர முகப்பரு, பால்பரு மறையும். கால் ஆணி வலி குறையும். இலையை நெல்லிக்காய் அளவு நன்கு அரைத்துபசும் பாலில் கலக்கிக் காலையில் மட்டும் மூன்று நாட்கள் கொடுக்கச் சிறு நீருடன் குருதிப்போக்கு, மலக்கட்டு, நீர்கடுப்பு, உடம்பு நமச்சல் ஆகியவை தீரும்.
----------------------------------------(மூலிகை தொடரும்)

0 comments:

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites