COOL TAMIL BOYS LIVE CRICKET

HINDU

Monday, 21 October 2013

போலி ஈமெயில் முகவரிகளை சுலபமாக கண்டறிய – Email Verifier

நண்பர்களோ அல்லது மற்ற நபர்களோ அவர்களை தொடர்புகொள்ள நம்முடன் ஈமெயில் முகவரியை பகிர்ந்து கொள்கின்றனர்.  ஆனால் மற்றவர்கள் பகிர்ந்து கொள்ளும் ஈமெயில் முகவரிகள் சரியானதா இல்லை போலியானதா என பார்த்தவுடன் நம்மால் கண்டறிய முடியாது. அவர்கள் கொடுக்கும் முகவரிக்கு மெயில் அனுப்பினாலும் சென்று சேராது. இதற்கு காரணம் ஒருவேளை அவர்கள் தவறாக ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம், அல்லது அதிக நாட்கள் உபயோகிக்காமல் விட்டதால் செயலிழந்து இருக்கலாம் அல்லது வேண்டுமென்றே நம்மிடம் போலியான ஈமெயில் முகவரியை கொடுத்திருக்கலாம்.
இது போன்ற நேரத்தில் அந்த ஈமெயில் முகவரி சரியானதா இல்லை வேலைசெய்கிறதா, செயல் இழந்து விட்டதா என சுலபமாக கண்டறிய நமக்கு ஒரு தளம் உதவி புரிகிறது.

  •  கீழே உள்ள லிங்கில் கிளிக் செய்து இந்த தளத்திற்கு செல்லுங்கள்.
  • உங்களுக்கு கீழே இருப்பதை போல விண்டோ வரும் அதில் உள்ள காலி கட்டத்தில் நீங்கள் பரிசோதிக்க வேண்டிய ஈமெயில் முகவரியை கொடுத்து அருகில் உள்ள Verify Email என்ற பட்டனை அழுத்தவும்.
  • நீங்கள் Verify Email பட்டனை அழுத்தியவுடன் கீழே நீங்கள் கொடுத்த ஈம்யில் முகவரி சரியானதா இல்லை போலியானதா என்ற முடிவு வரும்.
சரியாக இருந்தால்
போலியானதாக இருந்தால்
  • இவற்றை வைத்து தெரிந்து கொள்ளலாம் ஈமெயில் முகவரிகள் உண்மையானதா இல்லை போலியானதா என்று.
இந்த தளத்திற்கு செல்ல - http://www.verifyemailaddress.org/

1 comments:

http://commentfrx.info/das-internet/18481-verifyemailaddress-berprfen-ob-eine-e-mail-adresse.html

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites