COOL TAMIL BOYS LIVE CRICKET

HINDU

Thursday, 24 October 2013

ஏவல், பில்லி சூனியம்.Cool_Tamil_Boys


ஏவல் என்று சொன்னால் ஆவிகளை மனிதர்கள் மேல் ஏவிவிடுகின்றதாகும். 

ஏவல்களின் வகைகள்

1. காட்டேரி என்ற நாமத்தையுடைய ஆவியை சமாதானத்தோடு வாழ்கின்ற ஒரு குடும்பத்தில் ஏவி விட்டால் குடும்பத்தில் சமாதானம் சீர்குலைந்து விடும். காட்டேரியானது குடும்பத்தில் புகுந்து அதை சின்னா பின்னாமாக்கி விடும்.

2. காளி என்ற நாமத்தையுடைய ஆவிக்கு பல அவதாரங்கள் உண்டு. 

3. அக்கினி காளியை ஒருவருக்குள் ஏவினால் அவர் அக்கினியில் விழுவார். 
அல்லது தீ மூட்டிக் கொண்டு மரிப்பார். 

4. அக்கினி ஆவி பிடித்தவர்கள் யாரையும் தீ வைத்து அழிக்கத் தயங்க மாட்டார்கள்.

5. உதிரக்காளி என்ற நாமமுடைய ஆவியை ஒரு பெண்ணுக்குள் ஏவி விட்டால் பெண் உதிரப்போக்கினால் உபாதை அடைவாள். அசுத்த ஆவி அந்த பெண்ணை விட்டு விலகும் வரையும் உபாதைப்படுவாள்.

6. முனி என்ற நாமமுடைய ஆவியை ஒரு ஆணுக்குள் ஏவி விட்டால் அவர் இரவு நேரத்தில் யாருக்கும் தெரியாமல் காடுகளுக்கோ அல்லது கற்குகைகளுக்கோ சென்று விடுவார். சில வேளைகளில் அவர் இறந்து விடவும் கூடும். 

மொத்ததில் மிருகத்தை ஒருவர் மீது ஏவி விட்டால் அந்த மிருகம் அவரை சேதப்படுத்துமோ,  அதபோல் இருப்பது ஏவல் போன்றவையாகும்.

பில்லி சூனியங்கள்

1. கால் அடி மண் 
பில்லி சூனியம் என்பது இரண்டும் ஒன்றாகும். யாருக்காவது தீங்கு விளைவிக்க வேண்டுமானால் சூனியம் செய்வார்கள். குறிப்பிட்ட ஒருவருடைய கால் அடி மண்ணை எடுத்து கொண்டு வந்து அவருடைய பெயருக்கு மந்திரம் செய்து அவருடைய வீடடு கூரையின் மேல் வீசி விட்டால் குறிப்பிட்ட அந்த வீட்டார் இரவில் நித்திரை செய்ய முடியாது. வீட்டின் மீது கல்விழுவது போன்ற சத்தம் வந்து கொண்டே இருக்கும். அத்தோடு காலில் எரிவு புண் ஏற்படுத்தல், சில சமயம் கால் விழங்காமல் போவதும் உண்டு
2. சுடுகாட்டு சாம்பல் 
தலைச்சன் பிள்ளையின் மண்டை ஓட்டுச் சாம்பலை எடுத்து அதில் சக்கரங்கள் போட்டு சூனியம் செய்ய வேண்டியவர்களின் பெயர்களை அதில் அடைத்து, மந்திர உச்சாடனம் செய்து குறிப்பிட்டவர்களின் வீட்டில் போட்டு விட்டால் அங்கு ஒருவருக்கொருவர் வெட்டிக் கொண்டோ, குத்திக் கொண்டோ பிரிந்து விடுவார்கள். அவ்வீட்டில் குடியிருக்க முடியாதவாறு வெட்டுப்பலி, குத்துப்பலி உருவாகி விடும். இதை உணவில் கலந்து கொடுத்தால் நோய்கள் உருவாகும்.
 3. முட்டை
ஒரு மு்டையை வைத்து மந்திர பூஜை செய்து குறிப்பிட்டவரின் வீட்டிலோ அல்லது வீட்டு வாசலிலோ உடைத்து விட்டால் அஙகு பிரச்சினைகள் உருவாகும். குடும்பத்தில் பலவிதமான மோசங்கள் உண்டாகும்.
 4. எந்திரம்
செப்புத் தகட்டில் பெயர் பதித்து மந்திர உச்சாடனம் செய்து ஏந்திரத்தை எரியும் அடுப்பில் போட்டு எரித்துக் கொண்டு வந்தால் பெயருடையவரின் சரீரங்களில் எரிவு உண்டாகி வேதனை அடைவர்.
 5. சுண்ணாம்பு
சிறிது சுண்ணாம்பை ஒரு சிறிய போத்தலில் அடைத்து இரவில் யாருக்கும் தெரியாமல் முச்சந்தியில் வைத்து அதிகாலையில் யாரும் அறியாதபடி அதை கொண்டு வந்து குறிப்பிட்ட இரண்டு குடும்பங்களின் பெயர்களின்படி மந்திரம் செய்து வீட்டிலோ சுவர்களிலோ அல்லது வேறு எதிலாவதோ பூசிவிட்டால் இரண்டு குடும்பங்களுக்கிடையில் சண்டைகள் ஏற்பட்டு குழப்பங்கள் உருவாகும்.
 6. எலுமிச்சைப்பழம்
சில எலுமிச்சைப்பழங்களை கொண்டு வந்து அதில் பெயர்களை வைத்து மந்திரம் செய்து வீடுகளில் போட்டு விட்டால் அல்லது வீடுகளில் புதைத்து விட்டால் பிரச்சினைகள் குழப்பங்கள் உருவாகும்.
 7. பொம்மை
சந்தனக் கட்டையில் ஒர் பொம்மை செய்து சரியாக அங்கங்கள் பதித்து சிகப்பு, கருப்பு, வெள்ளை நூல்களால் சுற்றி அலங்கரித்து, எதிரியின் பெயரை பொம்மைக்கு வைத்து, மந்திர பூஜை செய்து, பத்திரமாக வைத்துக்கொண்டு அதன் சரீரத்தில் சிறிய ஊசியால் குத்தினால் எதிரிக்கு அந்தந்த இடங்களில் ஊசி குத்தப்படும். எந்தெந்த அவயவங்களில் குத்துகின்றோமோ அந்த அவயவங்கள் வேதனை கொடுக்கும். இந்த பொம்மையை மாவிலும் செய்யலாம்.

2 comments:

vanakkam ungalai neril santhikkanum enathu cell no;9443107992/9655840712/9843442712 pls call

thaivam aduravarai eppadi kadurathu

Post a Comment

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites