COOL TAMIL BOYS LIVE CRICKET

HINDU

Thursday, 24 October 2013

இண்டு.Cool_Tamil_Boys



1. மூலிகையின் பெயர் -: இண்டு.


2. தாவரப் பெயர் -: ACACIA CAESIA.
3. தாவரக்குடும்பம் -: MIMOSACEAE.
4. பயன் தரும் பாகங்கள் -: இலை, தண்டு, மற்றும் வேர் முதலியன.

5. வளரியல்பு -: இண்டு தமிழ் நாட்டில் சிறு காடுகளிலும், வேலிகளிலும் தானே வளர்வது. வரட்சியைத் தாங்கி வளரக் கூடியது. முதன் முதலில் இந்தோ மலேசியா மற்றும் தாய்வானில் தோன்றியது. சிறகமைப்புக் கூட்டிலைகளையும் வளைந்த கூறிய முட்கள் நிறைந்த வெண்மையான தண்டினையும் உடைய ஏறு கொடி. பருவத்தில் காலையில் சிறு சிறு பூக்கள் வெண்மையாக கொத்தாக வேப்பம் பூப் போல் பூக்கும். பட்டையான காய்களயுடையது. விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.

6.மருத்துவப் பயன்கள் -: இண்டு கோழையகற்றுதல், நாடி நடையும், உடல் வெப்பத்தையும் அதிகரித்தல் ஆகிய குணங்களை உடையது.

இண்டத்தண்டை துண்டாக நறுக்கி ஒரு புறம் வாயினால் ஊத மறுபுறம் சாறு வரும். அவ்வாறு எடுத்த சாறு 15 மி.லி. யில் திப்பிலியின் பொடி, பொரித்த வெங்காரம் வகைக்கு 1 கிராம் சேர்த்துக் காலை மட்டும் 3 நாள் கொடுக்க ஈளை, இருமல் குணமாகும்.

மேற்கண்ட மருந்தை 1 தேக்கரண்டி வீதம் குழந்தைகளுக்குக் கொடுக்கச் சளி, மாந்தம் ஆகியவை தீரும்.

இண்டக்கொடிச் சமூலம், தூதுவேளை, கண்டங்கத்திரி வகைக்கு 1 பிடி திப்பிலி, பூண்டு வகைக்கு 5 கீராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டு கால் லிட்டராகக் காய்ச்சி காலை, மாலை 100 மி.லி. வீதம் கொடுத்துவர இரைப்பிருமல் தீரும், குழந்தைகளுக்கு 25 மில்லி. வீதம் கொடுத்து வர இரைப்பிருமல் தீரும். குழந்தைகளுக்கு 25 மி.லி. ஆகக் கொடுக்கலாம்.

இண்டம் வேர் தூதுவேளை வேர் வகைக்கு 2 கிராம் சிதைத்து 2 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இரைப்பிருமல் தீரும்.

இண்டம் இலை, சங்கிலை, தூதுவேளையிலை, திப்பிலி, சுக்கு வகைக்கு 20 கிராம் 1 லிட்டர் நீரில் இட்டு கால் லிட்டராகக் காய்ச்சி 100 மி.லி. ஆகக் காலை, மாலை சாப்பிட இருமல் தீரும்.

--------------------------------------------(தொடரும்)

இசப்கோல்.Cool_Tamil_Boys






1. மூலிகையின் பெயர் -: இசப்கோல்.

2. தாவரப் பெயர் -: PLANTAGO OVATA.

3. தாவரக் குடும்பப் பெயர் -: PLANTAGINACEAE.

4. வேறு பெயர்கள் -: இஸ்கால், ஆங்கிலத்தல் ‘PSYLLIUM’என்று பெயர்.

5. வகைகள் -: ப்ளேன்டகோ சில்லியம், ப்ளேன்டகோ இன்சுல்லாரிஸ், ஜிஐ 1,
ஜிஐ 2, மற்றும் நிஹாரிக்கர் போன்றவை.

6. பயன்தரும் பாகங்கள் -: விதை, விதையின் மேல் தோல் முதலியன.

7. வளரியல்பு -: இசப்கோல் ஒரு சிறு செடி வகையைச் சேர்ந்தது. இது ஒரு அடி முதல் 1.5 அடி வரை உயரம் வளர்க்கூடியது. இதற்கு மணல் பாங்கான களிமண் நிலங்களில் பயிரிட ஏற்றது. வடிகால் வசதி வேண்டும். இதற்கு 7.2 - 7.9 கார அமிலத் தன்மையுள்ள நிலமாக இருத்தல் வேண்டும். நிலத்தைப் பண்படுத்தி உரமிட்டு பாத்திகள் அமைத்து நிலத்தைப் பண்படுத்த வேண்டும். இந்தியாவில் அக்டோபர் - டிசம்பர் மாதங்களில் நடவுக்கு ஏற்ற பருவங்கள். விதையை மணலுடன் சேர்த்து மேலாக வதைத்து தண்ணீர் பாச்ச வேண்டும். ஒரு ஹெக்டருக்கு 7-12 கிலோ விதை தேவைப்படும். பின் 15-20 நாட்களுக்கு ஒருமுறை நீர் பாச்ச வேண்டும். சுமார் 7 நீர் பாச்சல் தேவைப்படும். விதைத்த 5-6 நாட்களில் விதை முளைக்கும். 3 வாரம் கழித்து 20 செ.மீ. X 20 செ.மீ செடிகள் இருக்குமாறு களை எடுத்து, கலைப்பித்து விட வைண்டும். 2-3 முறை களை எடுக்க வேண்டும். பின் 3 வாரம் கழித்து மேலுரமிட்டு பயிர் பாதுகாப்பு செய்ய வேண்டும். விதைத்து 2 மாதங்களில் பூக்க ஆரம்பிக்கும். பூக்க அரம்பிச்சவுடன் நீர் பாச்சக் கூடாது. பின் 4 மாதம் கழித்து அறுவடை செய்ய வேண்டும். அடிப்பகுதியிலிருந்து நீண்ட காம்புகள் பூக்கும். விதைகள் மெல்லியதாகவும், இளஞ்சிவப்பு நிறமாக இருக்கும். விதைகள் முதிர்ச்சி அடையும் போது செடிகளின் அடிபாக இலைகள் மஞ்சள் நிறமாகும், பழங்கள் லேசாக அமுக்கினால் 2 விதைகள் வெளிவந்து விடும். காலை 10 மணிக்கு மேல் அறுவடை சிறந்தது. செடிகளை வேறுடன் பிடுங்கி பெரிய துணிகளில் கட்டி எடுத்து களத்திற்குக் கொண்டு வத்து விரித்துப் பரப்பி, காயவைக்க வேண்டும். 2 நாட்கள் கழித்து டிராக்டர் அல்லது மாடுகள் கொண்டு தாம்பு அடிக்க வேண்டும். விதைகளைப் பிரித்தெடுத்த பின்பு செடிகள் மாட்டுத் தீவனமாகப் பயன் படுத்தலாம். பின் இயந்திரங்கள் மூலம் விதையின் மேல் தோலைப் பிரித்தெடுக்க வேண்டும்.

இந்தச் செடியின் விதைகளின் மேல் தோல்கள் தான் மருந்துக் குணம் அதிகமுடையது. விதையின் மேல் தோலுக்குப் பிசுபிசுப்புத் தன்மை உண்டு. இந்த விதையின் ஒரு வித எண்ணெய் மற்றும் சிறுய அளவில் அக்யுபின் மற்றும் டானின் என்ற க்ளோக்கோஸைடுகள் உள்ளது. இதன் தோல் தண்ணீரை உறிஞ்சி தன்னிடத்தில் நிறுத்திக் கொள்ளும் தன்மை உடையது. குஜராத்திலும், ராஜஸ்தானில் அதிகமாக விளைகிறது. இது இந்தியாவின் முக்கிய ஏற்றுமதி மருந்துப் பொருளாகும். விதைகளின் மூலம் இனப் பெருக்கும் செய்யப்படுகிறது.

8. மருத்துவப் பயன்கள் -: இசப்கோல் விதைகள் குடல்புண், மலச்சிக்கலை நீக்கப் பயன்படுகிறது. மேல்தோல் வயிற்றுப் போக்கு, சிறுநீரக கோளாறுகள் நீக்கப் பயன்படுகிறது. தொண்டை மற்றும் நுரையீரல் நோய்களைக் குணப்படுத்த, தேனுடன் உபயோகப்படுத்தப்படுகிறது. இம்மூலிகைச் சாயங்கள், அச்சு ஐஸ்கிரீம் மற்றும் அழகு சாதனங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. தோல் நீக்கப்பட்ட விதைகளில் 17-19 சதம் வரை புரதச் சத்து உள்ளதால் கால் நடைத் தீவனமாகப் பயன் படுகிறது.

--------------------------------------------(தொடரும்)

ஆவாரை.Cool_Tamil_Boys



ஆவாரை.
1. மூலிகையின் பெயர் -: ஆவாரை.

2. தாவரப்பெயர் -: CACSIA AURICULTA.
3. தாவரக்குடும்பம் -: CAESALPINIACEAE.
4. பயன்தரும் பாகங்கள் -: இலை, பூ, காய், பட்டை, பிசின், வேர் ஆகிய அனைத்தும் மருத்துவப் பயனுடையவை.

5. வளரியல்பு -: ஆவாரை தமிழகமெங்கும் அனைத்துவகை நிலங்களும் ஏற்றவை. எல்லா இடங்களிலும் தானே வளர்கிறது. வியாபார நோக்குடனும் பயிரிடுகிறார்கள். பழிச்சிடும் மஞ்சள் நிறப் பூக்களையுடைய அழகிய குறுஞ்செடி, மெல்லிய தட்டையான காய்களையுடையது. இதன் பட்டைத் தோல் பதனிடப் பயன் படுகிறது. இது ஒரு வருடப் பயிர். வேர் எடுக்காவிட்டால் ஆண்டுக்கணக்கில் உயிருடன் இருக்கும். ஆவரஞ்செடி பயிரிட முதலில் நிலத்தை நன்றாக உழுது உரமிட்டு நீள் பாத்திகள் அமைக்க வேண்டும். ஆவாரை விதைகளை நேரடி விதைப் பெனில் 15 கிலோவும், நாற்றங்கால் என்றால் 7.5 கிலோவும் தேவைப்படும். 45 நாட்கள் வயதுடைய நாற்றை நீள் பாத்திகளில் 1.5 அடிக்கு 1.5 அடி இடைவெளியில் நட வேண்டும். பயிர் தண்ணீருக்குப் பின் 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாயச்ச வேண்டும். நான்கு மாதங்களுக்கு ஒரு முறை இலைகளைப் பறிக்கலாம். ஒரு வருடத்தில் 2000 கிலோ இலைகள், 250 கிலோ பூக்கள், மற்றும் 500 கிலோ காய்கள் கிடைக்கும். பதப் படுத்த நிழலில் 5 நாட்கள் உலரவைக்க வேண்டும் இலைப்புள்ளி, இலைச்சுருட்டு நோய்கள் வராமல் இருக்க மருந்துக் கொல்லியைப் பயன் படுத்த வேண்டும். செலவு ஒரு வருடத்திற்கு ரூபாய் 12,000 வரவு ஒருவருடத்திற்கு 60,000 ஆக வருமானம் ரூ.48,000 இவை தோராயமானவை.

6. மருத்துவப் பயன்கள் -: ஆவாரை சதை, நரம்பு, ஆகியவற்றை சுருக்கும் தன்மையுடையது. விதை காமம் பெருக்கியாகச் செயல் படும். சர்கறை நோய்க்கு நல்ல மருந்து. உடம்பின் சரும துர் வாடையைப் போக்குவதுடன் நிறமூட்டும்.

இதன் முக்கிய வேதியப் பொருட்கள் -: மர்பட்டையில் டானின்கள் உள்ளன. பீட்டா ஸிஸ்டீரால் மற்றும் கெம்ப்பெரால் பூக்களில் உள்ளன. இலைகளில் 3 வகை கீட்டோ ஆல்கஹால்களும் சாமோடிக்கும் உள்ளன. இது தவிர கொரடென்சிடின் மற்றும் ஆரிகுளமாசிடின் உள்ளன.

“ சொல்லுதற்கு மட்டோ தொலையாத மேகநீ
ரெல்லா மொழிக்கு மெருவகற்று - மெல்லவச
மாவாரைப் பம்பரம் போல் லாட்டுத் தொழிலணங்கே
யாவாரை மூலியது.”

ஆவாரை செடியானது சர்வ பிர மேக மூத்திர ரோகங்களையும் ஆண்குறி எரிவந்தத்தையும் குணமாக்கும்.

முறை -: அரைப்பலம் ஆவாரம் பட்டையை நன்றாய் இடித்து ஒரு மட்கலயத்தில் போட்டு அரைப்படி சலம் விட்டு அடுப்பில் வைத்து சிறுக எரித்து வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சி வடிகட்டி தினம் இரு வேளை 1.5 அவுன்ஸ் வீதம் கொடுத்துவர மது மேகம், ரத்த மூத்திரம், பெரும்பாடு, தாகம் இவை போம். இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டி லேகியமாகவும், சூரணமாகவும் கியாழமாகவும் கொடுப்பதுண்டு.

பூச்சூரண்த்தையோ, பூவைக் குடிநீராக்கிப் பாலில் கலந்தோ, இதழ்களைக் கறிக்கூட்டாகவோ நாள் தோறும் பயன் படுத்த மேக வெட்டை, தேக உட்சூடு, உடல் நாற்றம், உடலில் உப்புப் பூத்தல் வரட்சி, ஆயாசம் நீங்கும். உடலுக்குப் பலத்தைத் தரும், தேகம் பொன்னிறமாகும்.

ஆவாரையின் பஞ்சாங்க (வேர், இலை, பட்டை, பூ, காய்) சூரணம் 10 கிராம் வீதம் காலை, மதியம், மாலை வெந்நீருடன் கொள்ள பிரமேகம், மதுமேகம், மித்தாகம், மிகுபசி, உடல் மெலிவு, உடல் எரிச்சல், உடல் முழுதும் வேதனை, பலக்குறைவு, மயக்கம், மூச்சுத் திணறல், ஆகியவை தீரும். 45, 90, 135 நாட்கள் சாப்பிட வேண்டும்.

ஆவரம் பட்டை, கஸ்தூரி மஞ்சள், ஒரு மிளகாய், சிறிது சாம்பராணி, நல்லெண்ணையுடன் (ஆவாரைத் தைலம்) காய்ச்சி, தலை முழுகி மதுமேகம் உடையவருக்கு காணும் தோல் வெடிப்பு, வறட்டசி, எரிச்சில் குணமாகும்.

20 கிராம் பட்டையைப் பொடித்து ஒரு லிட்டர் நீரில் இட்டு 200 மி.லி. யாகக் காய்ச்சி 50 மி.லி. காலை, மாலை குடித்து வர மதுமேகம், சிறுநீருடன் இரத்தம் கலந்து போதல், பெரும்பாடு, தாகம் ஆகியவை தீரும்.


----------------------------------(மூலிகை தொடரும்.)

ஆற்றுத்தும்மட்டி.Cool_Tamil_Boys





1. மூலிகையின் பெயர் :-ஆற்றுத்தும்மட்டி.

2. தாவரப்பெயர் :- CITRULLUS COLOCYNTHES.

3. தாவரக்குடும்பம் :- CUCURBTACEAE.

4. வகைகள் :- பெரிய தும்மட்டி, சிறு தும்மட்டி என இரு
வகைப்படும்.

5வேறு பெயர்கள் -: கொம்மட்டி, வரித்தும்மம் மற்றும் பேய்கும்மட்டி
'Bitter Apple' என்றும் சொல்வர்.

6. பயன்தரும் பாகங்கள்- இலை, காய், வேர் ஆகியவை
மருத்துவப் பயனுடையவை.

7. வளரியல்பு :- ஆற்றுத்தும்மட்டியின் தாயகம்
மெடட்ரேனியன் மற்றும் ஆசியா. 1887 ல் துருக்கி,
Nubia and Jrieste ல் இதைக்கண்டு பிடித்தார்கள்.
ஆப்பிரிக்கா, இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் அதிகம்
காணப்படுகிறது. தமிழகமெங்கும் மணற்பாங்கான
இடங்களில் வளர்கிறது. மிகவும் வெட்டப்பட்ட
இலைகளையுடைய தரையோடு வேர்விட்டுப்
படரும் கொடி. பச்சை, வெள்ளை நீள வரிகளை
யுடைய காய்களையுடையது. காய்கள் சிறிய பந்து
போல் இருக்கும். ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை
வண்ணத்திலும் இருக்கும். இதில் அமிலத்
தன்மை அதிலம் இருக்கும். விதைகள் மூலம்
இனப்பெருக்கம் செய்யப்படுகிறது.

8. மருத்துவப்பயன்கள் :- சமூலம் நுண்புழு கொல்லும்.
நஞ்சு முறிக்கும். காய் சிறு நீர், மலம் பெருக்கும்.

புழுவெட்டினால் மயிர் கொட்டும் இடஙுகளில் காயை
நறுக்கித் தேய்த்து வரப் புழு வெட்டு நீங்கும். முடி வளரும்.

பெருந்தும்மட்டி, சிறு தும்மட்டி, பேய்சுரை, பேய்
புடல், பேய் பீர்க்கு ஆகியவற்றை சமூலமாக
உலர்த்திப் பொடித்து சமனெடை கலந்து அரைத்
தேக்கரண்டி காலை மாலை வெந்நீரில் கொள்ள
அனைத்து நஞ்சுகளும் முறியும்.

தும்மட்டிக்காய் சாற்றில் கருஞ்சிரகத்தை அரைத்து
விலாவில் பூசினால் குடல் பூச்சிகள் வெளியேறி
விடும்.

பேய்குமட்டிக்காய்சாறு, பால், தனித்தேங்காய்
பால் வகைக்கு 1 லிட்டர், விளக்கெண்ணைய்,
வெங்காயச்சாறு வகைக்கு 3 லிட்டர் கலந்து
அவற்றுடன் கடுகு, வெள்ளைப் பூண்டு, பஞ்சல
வணம், கடுக்காய், கடுகுரோகனி, அதிமதுரம்,
திரிகடுகு, ஓமம், வாய்விளங்கம், சீரகம்,
சிற்றரத்தை, கோஸ்டம், சிறுநாகப்பூ, சன்ன
லவங்கப்பட்டை வகைக்கு 2 கிராம் அரைத்துப்
போட்டுப் பதமுறக் காய்ச்சி வடித்துக் (ஆற்றுத்
தும்மட்டி எண்ணெய்) காலையில் மட்டும்
2,3 தேக்கரண்டி( 4 முறை பேதியாகுமாறு)
4,5 நாள்கள் சாப்பிட்டு வர வாதநீர், கிருமிகள்
ஈரல்களின் வீக்கம், நீர்கோவை, பெருவயிறு,
இடுப்புவலி, வாயு, ருதுச்சூலை முதலியவை
தீரும்.

துமட்டிக்காய், எலுமிச்சம்பழம், வெள்ளை
வெங்காயம், நொச்சி, இஞ்சி இவற்றின்
சாறுவகைக்கு 1 லிட்டர் கலந்து சிறு தீயில்
காய்ச்சி 1 லிட்டராக வற்றி வரும் போது
இறக்கி ஆறவைத்துக் கல்வத்திலிட்டு ரசம்
லிங்கம், பெருங்காயம், இந்துப்பு, ஓமம்,
வெங்காயம், கடுகு, மஞ்சள், வெந்தயம்,
மிளகு, காந்தம், நேர்வாளம் வகைக்கு
10 கிராம் பொடித்துச் சேர்த்து மெழுகுப்
பதமாய் அரைத்து தூதுளங்காய் அளவாக
வெல்லத்தில் பொதித்து10 நாள்கள் காலை
யில் மட்டும் கொடுத்து வர வயிற்று நோய்கள்
குன்மம், வாயு தீரும்.

ஆரை.Cool_Tamil_Boys




1.       மூலிகையின் பெயர் :- ஆரை.

2.       தாவரப்பெயர் :- MARSILEA 
                      QUADRIFOLIA.

3.       தாவரக்குடும்பம் :- MARSILEAFEAE.

4.       பயன் தரும் பாகங்கள் :- இலைகள்.

5.       வேறு பெயர்கள் :- ஆராக்கீரை,  
         ஆலக்கீரை என்பன. ஆங்கிலத்தில் 
     பொதுவான பெயர் 
     European water clover என்று சொல்வர்.

6.      வளரியல்பு :- ஆரை ஒரு நீர்தாவரம். 
    இது 3000 ஆண்டுகளுக்கு முன்பே 
    உணவாகப் பயன் படுத்தியுள்ளார்கள். 
    மத்திய, தெற்கு ஐரோப்பாவில்  காணப்
    பட்டது. பின் ஆப்கானீஸ்தான் 
    இந்தியா, சைனாவுக்குப் பரவிற்று. நூறு 
    ஆண்டுகளுக்கு முன்பு வட அமரிக்காவில் 
    காணப்பட்டது. இது செங்குத்தாக வளர்ந்து 
    தண்டில் நான்கு கால் வட்ட இலைகளாக 
    கொண்ட மிகவும் சிறிய செடி. இது 
    ஆற்றங்கரை, குழம், ஏரிக்கரை களிலும், 
    மணல் பாங்கான ஈரமான இடங்களிலும் 
    நன்கு தானே வளர்கிறது.  இது தண்ணீரில் 
   மிதக்கும், தரையிலும் வளரும். இதற்கு 
   லேசான நிழல் தேவைப்படும். கரிமலவாயு 
   குறைந்து எடுத்துக்கொள்ளும். வளர்ச்சி 
   மெதுவாக இருக்கும். இதில் வேறு வகைகளும் 
   உண்டு. இதன் இலைகள் பச்சையாக இருக்கும். 
   இது தொடர்ச்சியாக வேர் விட்டுப் படர்ந்து 
   வளரும். இது சுமார் ஒரு அடி நீழும். 
   அதன் வேருடன் 2 அங்குலம் வெட்டி 
   இன விருத்தி செய்வார்கள்.

7.   மருத்துவப்பயன்கள் :- ஆரை வெப்பம் 
   நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது. 
   பாம்புக் கடியைக் குணமாக்கும்.

      கீரையைச் சமைத்துண்ண தாய்பால் சுரப்பை        
      நிறுத்தும்.

      கீரையைச் சமைத்துண்ண பகு மூத்திரம் 
      போகும்.

      இதன் இலையை நிழலில் உலர்த்திப் 
      பொடி செய்து 30 கிராம் தூளை அரை 
      லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, 
      பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை 
      பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், 
      சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.


---------------------------------(தொடரும்)


ஆடையொட்டி.Cool_Tamil_Boys



ஆடையொட்டி.

மூலிகையின் பெயர் :– ஆடையொட்டி.

தாவரப்பெயர் :– TRIUMFETTA RHOMBOIDEA Jacq.  Syn: Triumfetta angulate Lam.

தாவரக்குடும்பம் :- TILIACEAE  (Malvacea) இதில் 70 வகைகள் உள்ளன.

பயனுள்ள பாகங்கள் :– இலை, பூ, பட்டை, காய் மற்றும் வேர்கள். (சமூலம்) மருத்துவ குணம் உடையவை.

வேறு பெயர்கள் :– ஒட்டுப்புல்லு (Ottuppullu), புறாமுட்டி(Puramutti)
Aadaiotti, Adayotti, Ataiyottippuntu,போன்றவை.
ஆங்கிலத்தில் - Burr Bush, Diamond burrbark, Chinese Burrபோன்றவை.
சமஸ்கிரத த்தில் ‘JHINJHARITA’ என்ன்றும் இந்தியில்‘CHITKI’ என்றும் அழைக்கிறார்கள்.

வளரியல்பு :– ஆடையொட்டி ஒரு செடி வகையாச் சேர்ந்தது. இது எல்லாவகை மண்ணிலும் வளரக் கூடியது. வெப்பத்தைத் தாங்கும். தமிழ் நாட்டில் மலை, வேலியோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணப்படும். இதன் தாயகம் பிறப்பிடம் தெரியவில்லை. இருந்தாலும் ஆப்பிரிக்காவிலிருந்து ஆஸ்திரேலியா, இந்தியா, தாய்வான், தென்ஆப்பிரிக்கா, கானா, .டான்சானியா, காமரூன், பிரேசில், இத்தோப்பியா, ஸ்விச்சர்லேண்ட், லிபியா, சைனா, ஜிம்பாவே, பாக்கீஸ்தான், மடகாஸ்கர், அமரிக்கா, உகாண்டா, இலங்கை போன்ற நாடுகளில் பரவிக் காணப்படுகிறது. இந்தச் செடி சுமார் ஆறு அடி உயரம் வரை வளரக்கூடியது. இது நேராகச் செல்லும் குத்துச் செடி. இதன் தண்டுகள் மெலிந்திருக்கும், லேசான சொரசொரப்பான முடியுடன் இருக்கும். இலைகள் எதிர் அடுக்கில் அமைந்திருக்கும். இலைகள் நீழ்வட்டத்தில் பசுமையாக சிறு முடியுடன் இருக்கும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்திலும், சில வகை வெள்ளை, ஆரஞ்சு நிறத்திலும் இருக்கும், ஐந்து இதழ்களைக் கொண்டிருக்கும். ஜூலை, மற்றும் ஜனவரி மாதங்களில் பூக்கள் பூக்கும். பூ முற்றியதும் அடிபாகத்தில் சூழ் இருக்கும், இது தன்மகரந்தச் சேர்கையால் காய் உண்டாகும். இதன் காய்கள் சிறிதாக மூன்று அரைகள் கொண்டதாக இருக்கும். இந்தக் காய்கள் உலர்ந்தால் ஆடைகள் படும் போது ஒட்டிக் கொள்ளும். இதனால் காரணப்பெயராக அமைந்தது. தமிழ் நாட்டில் தரிசு நிலங்களில் தானாக வளர்ந்தாலும் இதை வெளி நாடுகளில் நல்ல நிலத்தில் பயிராகப் பயர் செய்கிறார்கள்.(மடகாஸ்கர்) விதைமூலம் இன விருத்தி செய்யப்படுகிறது..  

மருத்துவப் பயன்கள் :– ஆடையொட்டியின் தன்மை தட்பம். பிரிவு இனிப்பைச் சேர்ந்தது. செய்கை துவர்ப்பி-லங்கோசகாரி (ASTRINGENT) உள்ளழலாற்று- அந்தர்ஸ்நிகதகாரி (DEMULCENT). இதன் இலை, பூ தொழுநோயை (Leprosy) குணப்படுத்தும், இலையின் பவுடர் இரத்த சோகையைப் (Anaemia) போக்கும். இதை கிழக்கு ஆப்பிரிக்காவில் நடைமுறையில் உள்ளது. இதன் தண்டு மற்றும் புதிய இலையை அரைத்து உள் கொடுக்க வயிற்றுப் போக்கு (Diarrhoea) குணமாகிறது. வயிற்று வலியும் குணமாகிறது. இதன் அடி வேர்கள் பொடி செய்து உள் கொடுக்க குடல் அல்சர் சூடு (Hot infusion-hasten parturition) குணமடைகிறது. இதன் சமூலத்தில் பிரித்தெடுக்கப்பட்ட ஆல்கலாய்டு ஏண்டி பாக்டீரியாகப் பயன்படுகிறது. இதன் வேர் அரைத்துக் கொடுக்க வயிற்றுக் கடுப்பு (Dysentery) குணமாகிறது. வெளிநாடுகளில் குதிரையின் வயிற்றுக் குடலில் புண் அஜீரணம் போன்று ஏற்பட்டால் இதன் இலைகளை நன்கு அரைத்து உள்ளுக்குக் கொடுத்து குணம் காண்கிறார்கள். இதன் இலைச் சாற்றிலிருந்து இரசாயனத்தைப் பிறித்தெடுத்து அது TRIUMFEROL 
( 4-HYDROXYISOXAZOLE  -TRIMETHYLSILYLACETARTRAMIA LINN.)இதிலிருந்து எடுக்கப்பட்ட சத்து- TRIUMFETTA BARTRAMIA LINN-Body tempature decrease. (1963) உடல் வெப்பத்தைக் குறைக்கிறது. வெளிநாடுகளில் இதன் இலைச்சாற்றை பவுடராகவும், வில்லைகளாகவும் தயாரித்து மார்க்கெட்டில் விற்பனை செய்கிறார்கள்.

ஆடையொட்டியின் இலையை அரைத்து நீரில் கலக்கி சர்கரை சேர்த்து உள்ளுக்குக் கொடுக்க வெட்டை ரோகம் குறைந்து நன்மை ஏற்படும்.

ஆடையொட்டியின் இலை மற்றும் காய் நீரில் அரைத்து நன்கு கலக்கி மூத்திரத் தாரையில் பீச்ச மேற்படி நீர் சம்பந்தமான ரோகங்கள் குணமாகும்.

ஆடையொட்டி இலையையும் பட்டையையும் அரைத்து நீரில் கலக்கி உள்ளுக்குக் கொடுக்க அதிசாரம் அஜீரண பேதி, சீத பேதிகள் குணமாகும்.



-------------------------------------------------------------------------------(தொடரும்)

ஆடாதோடைCool_Tamil_Boys





















1) வேறு பெயர்கள்: ஆடாதொடை

2) தாவரப் பெயர்கள்: Adatoda Vasica Nees, குடும்பம் - Acanthaceae

3) வளரும் தன்மை: ஆடாதோடை என்ற செடியைக் கிராமங்களில் அனைவரும் அறிந்திருப்பார்கள். நீண்ட முழுமையான ஈட்டி வடிவ இலைகளையும் வெள்ளை நிறப் பூக்களையும் உடைய குறுஞ்செடி. வேலியில் வைத்து வளர்க்கப்படுகிறது. தமிழ் நாட்டில் எல்லா மாவட்டங்களிலும் வளர்கிறது. இது கசப்புச் சுவை, வெப்பத்தன்மை, காரப்பிரிவில் சேரும். இது விதை நாற்று, கரணை மூலம் இனப்பெருக்கம் செய்யப்படும்.

4) பயன்படும் உறுப்புகள்: இலை, பூ, பட்டை, வேர் ஆகியவ மருத்துவப் பயனுடையவை.

5) பயன்கள்: ஆடாதோடை இலையும் ஐந்து குறுமிளகும் சாப்பிட்டால் ஆடாத உடலும் ஆடும், பாடாத குரலும் பாடும் என்ற ஒரு பழமொழியுண்டு. இதனால் காயம், ஈளை இருமல், சுரம், காமாலை, இரத்தக் கொதிப்பு இவைகளை குணமாக்கும். கபத்தை அகற்றும், இசிவை அகற்றும். நுண்ணிய புழுக்களைக் கொல்லும். சிறுநீரைப் பெருக்கும் தன்மையுடையது.

இலையின் ரசத்தைப் பத்து முதல் இருபது துளிவரை எடுத்துத் தேனுடன் கலந்து சாப்பிட வாயு, கபக்குற்றுங்களின் பெருக்கைச் சமன்படுத்தியும், வாத தோசங்கள், பற்பல சுரங்கள், முப்பிணி நோய், வயிற்று நோய், ரத்தக் கொதிப்பு, ரத்த பித்தம், இருமல், மேல் இளைப்பு, வாந்தி, விக்கல், சூலை அண்ட வாயு இவைகளைப் போக்கும். பாடக்கூடிய நல்ல குரல் தரும். இலையை உலர்த்திச் சுருட்டாகச் சுருட்டி புகைபிடித்துவர இரைப்பு நோய் நீங்கும். ஆடாதோடை இலையுடன் இலைக்கள்ளி இலைச் சாற்றைக் கலந்து வெல்லம் சேர்த்து மணப்பாகு செய்து 10 முதல் 20 துளி அளவு 2-3 முறை கொடுத்தால் இரைப்பிருமல், வயிறு உப்புசம், கப நோய்கள் குணமடையும். இலைச்சாறு 2 தேக்கரண்டி எருமைப் பாலில் காலை மாலை கொடுத்து வரச் சீதபேதி, ரத்தபேதி குணமடையும்.

ஆடாதோடையின் பூவை வதக்கி இரு கண்களின் மீதும் வைத்துக் கட்ட கண்களில் உண்டாகும் நோய் தீரும்.

ஆடாதோடைப் பட்டையை நன்றாக இடித்துச் சலித்து குடிநீர் செய்து உட்கொண்டாலும், பட்டையை உலர்த்தி இடித்து சூரணம் செய்து வைத்துக் கொண்டு வெந்நீரில் 2 கிராம் சாப்பிட்டு வந்தாலும் சுரம், இருமல், இளைப்பு ஆகிய நோய்கள் நீங்கும்.

ஆடாதோடை வேருடன் கண்டங்கத்தரி வேர் சமனளவு சேர்த்து இடித்துச் சலித்து அரை முதல் ஒரு கிராம் வரை தேனில் சாப்பிட்டு வர நரம்பு இழுப்பு, சவாச காசம், சன்னி, ஈளை, இருமல், சளிசுரம், என்புருக்கி, குடைச்சல்வலி ஆகியவை குணமாகும். ஆடாதோடை வேரினால் இருமல், உஷ்ணம், மந்தம், வியர்வை நோய், கடின மூச்சு, கழுத்து வலி முதலியவை நீங்கும். கற்பிணி பெண்ணுக்குக் கடைசி மாதத்தில் வேர்கசாயத்தை காலை மாலை கொடுத்துவரை சுகப் பிரசவம் ஆகும்.

ஆகவே ஆடாதோடை என்பது இருதயம், இரைப்பை, நுரையீரல், இவைகளில் கபத்தினாலும், வாதத்தினாலும், பித்தத்தினாலும் ஏற்படும் கோளாறுகளைக் குணப்படுத்தும் ஓர் அற்புத மூலிகையாகும். (அடுத்தமூலிகை தொடரும்)

ஆகாச கருடன் கிழங்கு.Cool_Tamil_Boys




ஆகாச கருடன் கிழங்கு.

மூலிகையின் பெயர் -: ஆகாச கருடன் கிழங்கு.
தாவரப்பெயர் -: CORALLO CARPUS.
தாவரக் குடும்பம் -: CUCURBITACEAE.
வேறு பெயர்கள் -: கொல்லன் கோவை, பேய்சீந்தில் முதலியன


வகைகள் -: இதன் குடும்பத்தில் 16 வகைகள் உள்ளன.
பயன் தரும் பாகங்கள்- இலை மற்றும் கிழங்கு முதலியன.
வளரியல்பு -: ஆகாச கருடன் எல்லா நிலத்திலும் வளரக்கூடியது. வரட்சியைத் தாங்கி வளரும். காடுகளிலும், மலைகளிலும் அதிகம் காணப்படும். தமிழகமெங்கும் காணப்படும். ஆப்பிரிக்காவில் அதிகம் இருக்கிறது. இதற்குத் தண்ணீர் தேங்கக்கூடாது. ஆகாச கருடன் கிழங்கு பூமிக்கடியில் இருந்து தோண்டி எடுத்த பின்னும் ஒரு கயிற்றில் தொங்க விட்டால் அது காற்றையும் வெளிச்சத்தையும் எடுத்துக் கொண்டு மண் நீர் தேவையில்லாமல் கொடியாக இலையுடன் வளர்ந்து வரக்கூடியது. காடு, வேலியோரத்தில் உள்ள இதன் கொடி வாடி விட்டாலும் மழைகாலத்தில் தானே கொடி வளர ஆரம்பிக்கும். பின் அருகில் உள்ள மரம், புதர் வேலிகளில் பிடித்து மேல் நோக்கிச் செல்லும்.  இதன் இலை கோவை இலை போன்று இருக்கும். இதன் கொடி மென்பையாக இருக்கும். இதன் பூக்கள் சிறிதாக மஞ்சள் நிறத்தில் இருக்கும். பூத்த மருநாள் உதிர்ந்து விடும். அந்த இடத்தில் சிறிய காய் உண்டாகும். அது பழுத்துச் சிவப்பாக இருக்கும் பின் காய்ந்து கீழே விழுந்து விடும். விதை மூலமும், கிழங்கு மூலமும் இன விருத்தி யுண்டாகும்.

மருத்துவப் பயன்கள் -: பாம்பு கடித்தவுடன் ஆகாசகருடன் கிழங்கில் எலுமிச்சம் பழம் அளவு நறுக்கி வெறும் வாயில் தின்னும் படி செய்ய வேண்டும். சில நிமிடங்களில் வாந்தியும், பேதியும் இருக்கும்.  விடம் முறிந்து நோயாளி குணமடைவான்.  விடம் முறிந்து உயிர் பிழைத்த பின் அவனை 24 மணி நேரம் வரை தூங்கவிடக்கூடாது.  பசிக்கு அரிசியைக் குழைய வேக வைத்துக் கஞ்சியாகக் கொடுக்க வேண்டும்.

மண்ணுளிப் பாம்பு மனிதனை நக்கி விட்டால் குஷ்டம் என்ற பெருவியாதி வெண்குட்டம் கருமேக இரணங்களை உண்டு பண்ணும். இந்தப் பாம்பின் விடம் நக்கியவுடன் உடலில் பாய்ந்து தன் குணத்தைக் காட்டாது. நாளாவட்டத்தில் கொஞ்சம் கொஞ்சமாக உடலில் பரவி மேற்கண்ட வியாதிகளை உண்டு பண்ணும். இதற்கு முற்றிய ஆகச கருடன் கிழங்கின் மேல் தோலை சீவி எடுத்து விட்டு, கிழங்கை பொடியாக நறுக்கி வெய்யிலில் காயவைத்துச் சுக்கு போல காய்ந்த பின் உரிலில் போட்டு நன்றாக இடித்து மாச்சல்லடையில் சலித்து எடுத்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை 10 கிராம் தூளை எடுத்து வாயில் போட்டு, சிறிதளவு வெந்நீர் குடித்து விட வேண்டும். இந்த விதமாக நாற்பது நாட்கள் கொடுத்து வந்தால் மண்ணுளிப் பாம்பின் விடம் முறிந்து விடும். உடலில் தோன்றிய கோளாறு யாவும் மறையும்.

இதே தூளைக் கொடுத்து வந்தால் லிங்கப்புற்று, கொருக்குப்புண், நாட்பட்ட வெள்ளை ஒழுக்கு இவைகள் குணமாகும். மேக ரோக கிரந்திப் புண் யாவும் குணமாகும். மற்ற விடப்பூச்சிகளின் விடத்தையும் முறிக்கும். இந்த மருந்தைச் சாப்பிடும் பொழுது புளி, எண்ணெய், மிளகாய் ஆகாது. பத்தியம் காக்க வேண்டும்.

இந்தக் கிழங்கின் இலைகளைக் கொண்டு வந்து மை போல் அரைத்து கண்டமாலை, தொடைவாளை, இராஜபிளவை, கழலைகட்டிகள் அரையாப்பு, இரத்தக் கட்டிகள், சிறு கட்டிகள் இவற்றின் மேல் கனமாகப் போட்டு வந்தால் கட்டி பழுத்து உடைந்து இரத்தம், சீழ் வெளியேறி ஆறிவிடும்.
ஆகாச கருடன் கிழங்கு ஒரு எலுமிச்சம் பழ அளவு, அதே அளவு அதன் இலை, அதே அளவு கொடியின் தண்டு இவைகளைப் பொடியாக நறுக்கி ஒரு சட்டியில் போட்டு சீரகம் தேக்கரண்டியளவு, அதே அளவு மிளகு இவைகளை அம்மியில் வைத்து அரைத்து அத்துடன் சேர்த்து அடுப்பில் வைத்து, லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, காலை மாலை அரை டம்ளர் வீதம் கொடுத்து விட வேண்டும். இந்த விதமாக 21 நாட்கள் கொடுத்து வந்தால்  ஓயாத வயிற்று வலி, வாதப்பிடப்பு, குலைநோய், பாண்டு ரோகம் இவைகள் யாவும் குணமாகும். ஆனால் காரம், புளி,  நல்லெண்ணையை விலக்க வேண்டும்.

ஆகாச கருடன் கிழங்கு இலையைக் கொண்டு வந்து பொடியாக நறுக்கு வைத்துக் கொண்டு, ஒரு சட்டியை அடுப்பில் வைத்துத் தேக்கரண்டியளவு விளக்கெண்ணையை விட்டு, எண்ணெய் காய்த வுடன், மூன்று கைப்பிடியளவு இலையைப் போட்டு, இலை பதமாக வதக்கியவுடன் அதை சுத்தமாக துணியில் சிறிய முட்டை போலக் கட்டி, தாங்குமளவு சூட்டுடன்  வேதனையுள்ள இடத்தில் ஒத்தடம் கொடுத்து வந்தால் கை, கால் மூட்டுகளில் ஏற்படும் வலி வீக்கங்கள் குணமாகும்.

ஆகாய கருடன் கிழங்கின் இலையைக் கொண்டு வந்து வெய்யிலில் சறுகு போல உலர்த்தி எடுத்து, உரலில் போட்டு இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு, சொறி, சிரங்கு, ஆறாத புண், குழந்தைகளுக்குத் தோன்றும் அக்கி, கரப்பான் புண்,  சிரங்கு இவைகளுக்கு இந்தத் தூளுடன் தேங்காயெண்ணைய் சேர்த்து,  குறிப்பிட்ட புண்களைக் கழுவி விட்டு மேலே தடவி வந்தால் மூன்றே நாட்களில் மறைந்து விடும்.

ஆகாச கருடன் கிழங்கு 100 கிராம், வெங்காயம் 50 கிராம், சீரகம் 20 கிராம் எல்லாம் சேர்த்து விளக்கெண்ணெயில் வதக்கி,  அரைத்து இளஞ்சூட்டில் வாதத்திற்குப் பற்றுப் போட்டால் வாத வலி குறையும் என்பது பாட்டி வைத்தியம்.

  
--------------------------------------------------------------(தொடரும்)

அஸ்வகந்தா.Cool_Tamil_Boys





அஸ்வகந்தா.
1)மூலிகையின் பெயர் -: அஸ்வகந்தா.

2)தாவரப்பெயர் -: WITHANIA SOMNIFERA DUNAL.

3) தாவரக் குடும்பம் -: SOLANACEAE.

4) வேறு பெயர்கள் -: அமுக்குரா, இருளிச்செவி, வராககர்ணி, இடிச்செவி.

5) வகைகள் -: ஜவகர் அஸ்காந்த்-20

6) பயன் தரும் பாகங்கள் -: வேர் மற்றும் விதைகள்.

7)வளரியல்பு -: அஸ்வகந்தாவின் பிறப்பிடம் வட ஆப்பிரிக்கா மற்றும் இந்தியா. பின் பரவிய இடங்கள் மத்தியப்பிரதேசம், பஞ்சாப், சிந்து, ராஜஸ்தான் மற்றும் கர்நாடக, தமிழ்நாடு. இது களர்,தரிசு, உவர் மற்றும் மணல் சாகுபடிக்கு ஏற்ற நிலம். குறைந்த மண் வளமுடைய நீமுச், மன்சூர், மனாசா போன்ற இடங்களிலும் பயிர் செய்யப் படுகிறது. இது ஒரு குறுஞ்செடி 1.5 அடி உயரம் வரை நேராக வளர்க்கூடியது. மத்தியப்பிரதேசத்தில் கிட்டத்தட்ட 4000 ஹெக்டர் பரப்ளவில் பயிரடப்பட்டு வருகிறது. தென்னிந்தியாவில் மைசூர், கோயமுத்தூர், திருநெல்வேலி, ஆகிய இடங்களில் பயிரிடப் படுகிறது. அமெருக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி போன்ற நாடுகளிக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வட ஆப்பரிக்க மெடிட்டரேனியன் பகுதிகளிலும் இயற்கையாக வளரவல்ல இந்த மூலிகையின் மற்றொரு ரகமும் உண்டு அது 2-4 அடி வரை வல்ல குறுகிய சாம்பல் நிறமுடைய ஒரு குற்று மரம். இதனை பஞ்சாப், சிந்து மற்றும் இதனை ஒட்டிய பிற மாநிலங்களிலும் காணலாம். விதை மூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது. விதைத்த 150-170 நாட்களில் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும். பிடுங்கி வேர், தண்டுப் பாகத்தைப் பிரித்தெடுக்க வேண்டும். வேர்கள் உலர வைத்து 4 ரகங்களாகப் பிறிப்பார்கள். முதிர்ந்த காய்களிலிருந்து விதைகளைப் பிறித்தெடுப்பார்கள். இவைகள் மருத்துவ குணமுடையவை.

8) மருத்துவப் பயன்கள் -: இதன் வேர்கள் மூட்டுவலி, வாதம், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப் புண் இவைகளைக் குணப்படுத்தும். வேர், இலை, விதை மற்றும் பழமென அனைத்திலும் ஆல்கலாய்டுகள் இருப்பதால் இதனை சித்தா, யுனானி, அலோபதி உட்பட மருந்துக் கெனபயன் படுத்தப் படுகின்றன. பாலுணர்வை அதிகரிக்கப்பதற்குப் பயன் படுகிறது. 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ஏற்படும் உடல் பலவீனம், கை, கால், சோர்வு இவைகளை நீக்கி, அதிக வலிமையையும் சக்தியினையும் தருகிறது.

‘கொஞ்சந் துவர்ப்பாங் கொடியகஞ் சூலையரி
மிஞ்சுகரப் பான்பாண்டு வெப்பதப்பு-விஞ்சி
முசுவுறு தோடமும்போ மோகம் அனு லுண்டாம்
அசுவகந் திக்கென்றறி.’

சிறிது துவர்ப்புள்ள அசுவகந்திக் கிழங்கினால் க்ஷயம், வாதசூலை, வாத கரப்பான், பாண்டு, சுரம், வீக்கம், சலதோஷம் இவை நீங்கும், மற்றும் மாதர்மேல் இச்சையும், பசியும் உண்டாகும் என்று உணர்க.

முறை -: அசுவகந்திக் கிழங்கை சிறு துண்டுகளாக நறுக்கிப் பசுவின் பாலில் அவித்து உலர்த்தி இடித்துச் சூரணம் செய்து சமனெடை சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது இச்சூரணத்தை வேளைக்கு ஒரு வராகனெடை வீதம் தினம் இரண்டு வேளை பசுவின் பாலில் கலக்கிக் கொடுக்கத் தேக வனப்பை உண்டாக்குவதுடன் தேகத்திலுள்ள துர் நீர், கபம், சூலை, கரப்பான், பாண்டு, மேக அழலை, வெட்டை, வீக்கம், கட்டி, பித்த மயக்கம் முதலியவற்றை நீக்கும். இன்னும் அசுவகந்திக் கிழங்குடன் சுக்கு சேர்த்து அரைத்துக் கட்டி வீக்கும் முதலியவற்றுக்குப் பத்துப் போடக் கரையும். இவையுமன்றி இதனுடன் இதர சரக்குகளைக் கூட்டிச் சில அவிழ்தங்கள் செய்வதுண்டு.

அசுவகந்திச் சூரணம் -: கிராம்பு 1, சிறு நாகப்பூ 2, ஏலம் 3, இலவங்கப் பட்டை 4, இலவங்கப் பத்திரி 5, சீரகம் 6, தனியா 7, மிளகு 8, திப்பிலி 16, சுக்கு 32, பாலில் அவித்து சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு 64, ஆகிய இவற்றை வராகனெடையாக நிறுத்துக் கொண்டு கல்லுரலில் இட்டுக் கடப்பாறையால் நன்கு இடித்து வஸ்திரகாயஞ்செய்து இவற்றின் மொத்தெடைக்கு நிகரான வெள்ளைச் சர்க்கரை கூட்டிப் புட்டியில் பத்திரப் படுத்துக. வேண்டும் போது வேளைக்கு கால் அரைத் தோலா வீதம் தினம் இரு வேளை 20-40 நாள் கொடுக்க மேகம், அஸ்திசுரம், அஸ்திவெட்டை சுவாசம், ஈளை, பாண்டு, மேக ஊறல் முதலியவை நீங்கும்.

அசுவகந்தித் தைலம் -: சுத்தி செய்த அசுவகந்திக் கிழங்கு பலம் 10, சற்றாமுட்டி வேர் பலம் 10, இவற்றைச் சிறு துண்டுகளாக நறுக்கி, இடித்து ஒரு பழகிய தைல பாண்டத்தில் போட்டு 12 படி சலம் விட்டு அதற்குள் 10 பலம் கொம்பரக்குத் தூளைத் தளர்ச்சியாக சீலையில் முடிந்து பாண்டத்தின் அடி மட்டத்திற்கு மேலே 4 விரல் உயரத்தில் நிற்கும் படி தோலாந்திரமாகக்கட்டி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்கவும். இந்த மண் பாண்டத்தில் விட்ட சலமானது நன்றாய்ச் சுண்டி மூன்று படி நிதானத்திற்கு வரும் சமயம் அடுப்பிலிருந்து இறக்கி ஆற விட்டு மறு பாண்டத்தில் வடித்து வைத்துக் கொள்க. அப்பால் முன் கியாழமிட்ட பாத்திரத்தைச் சுத்தப்படுத்தி அதனில் நல்லெண்ணெய் படி 2 ததிமஸ்து (பசுவின் தயிரைச் சீலையில் முடிச்சுக் கட்டி வடித்தெடுத்த சலம்) படி 1 முன் சித்திப் படுத்திய கியாழம் விட்டு உறவாகும் படி கலக்கி அடுப்பிலேற்றிச் சிறு தீயாக எரிக்குந் தறுவாயில் சிற்றரத்தை, நன்னாரி, தேவதாரம், பூலாங்கிழங்கு, பூஞ்சாத்துப் பட்டை, கடுக்காய், தான்றிக்காய், நெல்லி வற்றல், கண்டந்திப்பிலி வகைக்கு பலம் அரைக்கால் வீதம் இடித்து வஸ்திரகாயம் செயுது பால் விட்டு அரைத்துக் கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டுக் கிளறிக் கொடுக்கவும். தைலமானது நன்றாய் கொதித்து வண்டல் மெழுகு பதம் வருஞ்சமயம் கீளே இறக்கி ஆற விட்டு வடித்து சீசாவில் அடைத்துத் தானிய புடம் வைத்து எடுத்துக் கொள்க. வாரம் ஒரு முறை தலைக்கிட்டுக் குழிக்க கப சம்பந்தமான ரோகம், சுர, குணமாகும், தேகம் இறுகும், கண் தெளிவடையும். இதற்குப் பத்தியம் பகல் நித்திரை, அலைச்சல், தேக உழைப்புக் கூடாது.

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites